Sunday 24 August 2014

கருப்பைக்குழல் சதை அடைப்பு:

கருப்பைக்குழல் சதை அடைப்பு:
    கருப்பைக் குழாயில் சதை அடைப்பு மற்றும் வீக்கம் உண்டாகி இருந்தால் சினையகத்தில் இருந்து கருமுட்டைகள் சரியானபடி கருப்பைக்கு வராமலும், ஆணின் உயிரணுக்கள் அதனைத் தொடாதவாறு இந்த அடைப்பு தடுக்கிறது. இதனைத் தகுந்த பரிசோதனை மூலமும் மற்றும் நாடிக்கணிப்பின் மூலமாகவும் அறிந்து, அதற்குண்டான மருந்துகளை உட்கொள்வதன் மூலம் நல்ல குணம் கிடைக்கும்.
சினையக பலவீனம்:
    சினையக பலவீனம் இரண்டு காரணங்களால் உண்டாகும்.
1.    உடலுக்குத் தேவையான ஊட்டமின்மை
2.    அமிலத்தன்மையால் மாதவிலக்கு சரியாகத் தோன்றாமல் இருப்பது.
உடல் பலவீனத்திற்கு:
    திரிபலாதி சூரணம், கரிசாலைச் சூரணம். அன்னபேதி செந்தூரம். நெல்லிக்காய் இலேகியம், தேற்றான்கொட்டை இலேகியம், வெண்பூசணிக் கிருதம் போன்ற மருந்துகள் சிறந்த பயனைத்தரும்.
அமிலத்தன்மை கட்டுப்பட:
திரிகடுகுச் சூரணம், பவழபற்பம், சங்குபற்பம், ஆறுமுக செந்தூரம், மகா வல்லாதி இலேகியம் போன்றவற்றைத் தகுந்த மருத்துவக் காண்காணிப்பின் பேரில் தரலாம்.

No comments:

Post a Comment