Friday, 18 September 2015

வெள்ளைப்படுதல் நோய்.! சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!

வெள்ளைப்படுதல் நோய்.! சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!

பெண்களின் பிறப்புறுப்பின் வழியே வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல் நோய் (Leucorrhea) என்கிறோம். நுண்ணுயிர்த் தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, கருப்பை வாய்ப்பகுதி வீங்குதல், கருப்பை மற்றும் யோனியில் புண், புற்றுநோய் போன்றவற்றால் வெள்ளைப்படும் நோய் ஏற்படலாம். சில சமயம் அந்தப் பகுதியில் நமைச்சலும் துர்நாற்றமும் ஏற்படும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
கீழாநெல்லி இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து, தயிரில் கலந்து 10 நாட்கள் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் உண்ணலாம்.
அம்மான்பச்சரிசி இலையை அரைத்துச் சுண்டைக்காய் அளவு எடுத்து, தயிரில் கலந்து பருகலாம்.
பொடுதலை இலையுடன், சம அளவு சீரகம் சேர்த்து அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.
கைப்பிடி அளவு வெள்ளருகுடன் 5 மிளகு, ஒரு பல் பூண்டு சேர்த்து அரைத்து மோரில் கலந்து அருந்தலாம்.
இரண்டு செம்பருத்தி பூவுடன், சிறு துண்டு வெண்பூசணி சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, சர்ககரை சேர்த்து அருந்தினால் ரத்தத்தோடு கூடிய வெள்ளைப்படுதல் குணமாகும்.
ஜவ்வரிசியை வேகவைத்துப் பால் சேர்த்து 10 நாட்கள் அருந்த, வெள்ளை, ரத்த வெள்ளை, சீழ்வெள்ளை ஆகியன குணமாகும்.
பொரித்த படிகாரம், மாசிக்காய், வால்மிளகு சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் கால் ஸ்பூன் எடுத்து வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் சீழ்வெள்ளை, ரத்த வெள்ளை குணமாகும்.
இளநீரில் ஒரு ஸ்பூன் சந்தனத்தூளை ஊற வைத்து, அந்த நீரை வடித்துப் பருகி வரலாம். .
திப்பிலி 5 பங்கு, தேற்றான் விதை 3 பங்கு கலந்து நன்றாய்ப் பொடித்து, அதில் 4 கிராம் எடுத்துக் கழுநீரில் 3 நாட்கள் சேர்த்து உண்ணலாம்.
ஓரிதழ் தாமரை இலை, யானை நெருஞ்சில் இலை இவற்றைச் சம அளவு எடுத்து அரைத்து, நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து மோரில் கலந்து அருந்தலாம்.
பரங்கிப்பட்டை, சுக்கு, மிளகு, நற்சீரகம் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து தேங்காய் பாலில் கலந்து பருகலாம்.
சப்ஜாவிதைப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.
ஒரு கைப்பிடி துத்தியிலையை இடித்து 4 பங்கு நீர் சேர்த்து 1 பங்காக வற்றவைத்து அதில் பால், சர்க்கரை கலந்து பருகலாம்.
சிறு துண்டு கற்றாழையைத் தோல் சீவி, கசப்பு நீங்கப் பத்து முறை நன்கு கழுவி சர்க்கரை சேர்த்து, தினமும் காலையில் சாப்பிட்டுவர வெள்ளை, ரத்த வெள்ளை, சீழ்வெள்ளை ஆகியன குணமாகும்.
விஷ்ணு கிரந்திவேர், ஆவாரை வேர்ப்பட்டை சம அளவு எடுத்து அரைத்து அதில் நெல்லிக்காய் அளவு எடுத்துப் பாலில் உண்ணலாம்.
தண்ணீர்விட்டான் இலையை அரைத்து 30 மி.லி. சாறு எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.
தென்னம்பூவை இடித்து, 30 மிலி சாறு எடுத்து, மோர் சேர்த்துப் பருகலாம்.
உணவுகள்
சேர்க்க வேண்டியவை:
தர்பூசணி, வெண்பூசணி, வெள்ளரி, வெந்தயம், பசலைக்கீரை, தண்டுக்கீரை, பருப்புக்கீரை, இளநுங்கு, நாட்டு வாழைப்பழம், நல்லெண்ணய், பனங்கிழங்கு.
தவிர்க்க வேண்டியவை:
மசாலா மற்றும் காரம் நிறைந்த உணவுகள். எண்ணெயில் பொரித்த உணவுகள், கோழி இறைச்சி.
Top of Form
Bottom of Form


poly cystic ovarian syndrom


PCOS
 என்றால் என்ன?

ஓவரி(OVARY) எனப்படுவது பெண்களின் சூலகம். இதுதான் முட்டைகளை உருவாக்கி அந்த முட்டைகள் கருக்கட்டியே குழந்தைகள் உருவாகின்றன.
cyst
எனப்படுவது தண்ணீர் நிரம்பிய கட்டிகள் , poly என்பது பல என்பதைக் குறிக்கும்.

ஆக ஒரு பெண்ணின் சூலகத்திலே பல திரவக் கட்டிகளின் உருவாக்கமே poly cystic ovarian syndrom எனப்படுகிறது.

இந்த நோயானது பெண்களிலே பொதுவான ஒரு நோயாகும். நிறையப் பெண்களுக்கு இந்த நோய் இருந்தாலும் அது எல்லா பெண்களிலும் தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.


இந்த திரவக் கட்டிகளை கொண்ட சூலகங்கள் அசாதாரணமாக ஹோர்மொன்களை சுரப்பதன் மூலமே ஒரு பெண்ணுக்கு பிரச்சினைகளைக் கொடுக்கிறது.

இந்த நோயின் அறிகுறிகள் எவை?

1.
அளவுக்கதிகமான பரு( முகப் பரு)

2.
உடற் பருமன் அதிகரித்தல்.

3.
அசாதாரண இடங்களிலே பெண்களுக்கு மயிர் வளர்தல், அதாவது முகம் , மார்பு, தொடை போன்ற இடங்களில் மயிர் வளர்தல்.

4.
ஒழுங்கற்ற மாதவிடாய்

5.
மலட்டுத் தன்மையை ஏற்படுத்தல்.

இவை எல்லாம் , எல்லா பாதிக்கப் பட்ட பெண்களிலேயும் இருக்கும் என்றில்லை. intha நோய் இருக்கும் போதே பல பிள்ளைகளைப் பெற்று வாழ்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட பதினைந்து பெண்களுக்கு ஒரு பெண் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவளாக இருக்கிறார்கள்.

மற்றும் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சீனியைக் கட்டுப் படுத்தும் இன்சுலின் என்ற ஹோர்மொனின் திறன் குறைவதால் அவர்கள் நீரழிவு நோயினால் பாதிக்கப் படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கின்றன.

இப்போது இந்தப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக நிறைய மருத்துவ வசதிகள் வந்து விட்டன. அதிலும் எவ்வளவு விரைவாக மருந்து ஆரம்பிக்கப் படுகிறது என்பதைப் பொறுத்தே அதன் பின் விளைவுகள் தீர்மானிக்கப் படுகின்றன.

ஆகவே , கன்னிப் பெண்களே உங்களுக்கு கீழே உள்ள ஏதாவது ஒரு பிரச்சினை இருந்தால் வைத்தியரை நாடி ஆலோசனை பெறுங்கள்....

1. 14
வயதாகியும் மாதவிடாய் ஆரம்பிக்காவிட்டால்.

2.
மார்பு , முகம் போன்ற இடங்களிலே மயிர் வளர்ந்தால்.

3.
ஒரு வருடத்திலே எட்டுக்கும் குறைவான மாதவிடாய்கள்தான் ஏற்படுகிறது என்றால்.

4.
அளவுக்கு அதிகமான கட்டுப் படுத்த முடியாத முகப் பரு ஏற்பட்டால்.

5.
உங்கள் கழுத்து மற்றும் கமக்கட்டுப் பகுதிகளிலே கறுப்புப் படிவுகள் காணப்பட்டால்.

6.
அதிக தாகம், அதிக சிறுநீர் கழித்தல் , அதிக பசி போன்ற நீரழிவு நோய்க்கான குணங்குறிகள் ஏற்பட்டால்.

7.
உடற்பருமன் அளவுக்கதிகமாக அதிகரித்தால்.